Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வர் காரில் தொங்கிக் கொண்டு சென்ற மேயர் ப்ரியா!? – அமைச்சர் சொன்ன விளக்கம்!

Advertiesment
முதல்வர் காரில் தொங்கிக் கொண்டு சென்ற மேயர் ப்ரியா!? – அமைச்சர் சொன்ன விளக்கம்!
, திங்கள், 12 டிசம்பர் 2022 (13:34 IST)
மாண்டஸ் புயல் பாதிப்புகளை காண சென்ற முதல்வரின் காரில் சென்னை மேயர் ப்ரியா தொங்கிக் கொண்டு சென்றதாக கூறப்படும் சம்பவம் குறித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்.

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்படியாக முதல்வர் பயணம் செய்த காரில் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா ஆபத்தான முறையில் வெளியே தொங்கியபடி பயணம் செய்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அவர், மேயர் ப்ரியா மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள அமைச்சர் சேகர்பாபு “மேயர் ப்ரியா தொங்கிக் கொண்டு வந்தது முதல்வரின் கார் அல்ல. பாதுகாப்புக்கு வந்த கார். ஒரு அசாதாரண சூழலில் உடனடியா அவ்விடம் நோக்கி விரைய மேயர் ப்ரியா அவ்வாறு செய்துள்ளார். அப்போதும் பாதுகாப்பு காவலர்களை அவர் காரிலிருந்து வெளியேற்றவில்லை.

ஒரு பெண்மணி இவ்வளவு விரைவாக ஆணுக்கு நிகராக இப்படி துணிச்சலோடு செய்கின்ற பணிகளை பாராட்டலாமே தவிர விமர்சிப்பது தேவையற்ற ஒன்று” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்திற்கு மழையா?