Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக அரசை களங்கப்படுத்தும் நோக்கத்தில் NCB களமிறங்கி உள்ளது: அமைச்சர் ரகுபதி

Siva
ஞாயிறு, 10 மார்ச் 2024 (12:57 IST)
தமிழகத்தில் ஆட்சி செய்யும் திமுக அரசுக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கத்தோடு தான் NCB களம் இறங்கியுள்ளது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்

போதைப்பொருள் தொடர்பான புகார் எழுந்த உடனே ஜாபர் சாதிக்கை திமுகவில் நீக்கிவிட்டோம், அவருக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி அமைச்சர் தமிழ்நாட்டில் திமுக அரசை களங்கப்படுத்தும் நோக்கோடு போதை பொருள் தடுப்பு பிரிவை பாஜக களம் இறக்கி விட்டுள்ளது என்றும் பாஜகவின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது என்றும் தெரிவித்தார்

மேலும் கடந்த பிப்ரவரி மாதம் தேடப்படும் நபராக ஜாபர் சாதிக் அறிவிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 21ஆம் தேதி மங்கை திரைப்படத்தின் விழாவில் அவர் கலந்து கொண்ட போது NCB எங்கே சென்றது என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்

இதற்கு பதில் அளித்துள்ள நெட்டிசன்கள்  தேடப்படும் நபராக சாதிக் அறிவிக்கப்பட்ட போதே அவரை திமுகவில் இருந்து நீக்காமல் போதைப்பொருள் பிடிபட்டவுடன் நீக்கியது ஏன் என்று தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments