வார இறுதியில் மட்டும் விஜய் பிரச்சாரம் செய்வது ஏன்? அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு..!

Siva
திங்கள், 15 செப்டம்பர் 2025 (13:47 IST)
நடிகர் விஜய்யின் அரசியல் சுற்றுப்பயணத்தால் தி.மு.க.வின் வாக்கு வங்கிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று தமிழக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதுபற்றிப் பேசினார்.
 
"விஜய் தனது சுற்றுப்பயணத்தை மாணவர்களின் வசதிக்காக வார விடுமுறையான சனிக்கிழமைகளை தேர்ந்தெடுத்துள்ளார்," என்று அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார். 
மேலும், விஜய்யின் சுற்றுப்பயணத்தின்போது பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும், விதிகளை மீறி செயல்பட்டதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 
விஜய்யின் கூட்டங்களுக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களுக்குக்கூட வழிவிடவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து பேசிய ரகுபதி, "ஒருவருக்கு ஆபத்து என்றால், எந்தப் பகுதியாக இருந்தாலும் ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழி விடத்தான் வேண்டும். ஆம்புலன்ஸை விட்டு கூட்டத்தை கலைக்க வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்குக் கிடையாது" என்று கூறினார். 
 
மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை நாட்களான சனி, ஞாயிறுகளில் விஜய் பிரச்சாரம் செய்வதாக அவர் விமர்சித்தார். "விஜய் கூட்டங்களுக்குக் கூடும் கூட்டம் அனைத்தும் வாக்குகளாக மாறாது" என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மட்டன் பிரியாணி, வஞ்சிர மீன்.. அ.தி.மு.க. பொதுக்குழுவில் அசத்தும் விருந்து!

நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் நின்றாலும் டெபாசிட் இழக்க வைக்க செய்வோம்: செங்கோட்டையன் சவால்

2 நாள் சரிவுக்கு பின் இந்திய பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் உச்சம் செல்லும் வெள்ளி.. இன்று ஒரே நாளில் ரூ.8000 உயர்வு..!

அதிமுக பொது குழு இன்று கூடுகிறது.. ஓபிஎஸ்சை இணைக்க ஈபிஎஸ் சம்மதமா?

அடுத்த கட்டுரையில்
Show comments