Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அம்மா சாலை பணியை ஆய்வு செய்த அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்

அம்மா சாலை பணியை  ஆய்வு செய்த அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்
, சனி, 5 செப்டம்பர் 2020 (22:41 IST)
கரூரில் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் அம்மா சாலை பணியை தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு.
 
கரூர் குளத்துப்பாளையம் பகுதியில் ரூபாய் 21.12 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் அம்மா சாலை பணிகளை தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
 
கரூர் பெரிய குளத்துப்பாளையம் பகுதியில் சுமார் 21.12 கோடி மதிப்பில் 40 அடி அகலத்தில் 2.6 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுவரும்  இந்த அம்மா சாலைப் பணியை தமிழக போக்குவரத்து அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.
 
அம்மா சாலை பணி நிறைவு பெறும் போது கரூரில் முக்கிய சாலையான செங்குந்தபுரம், காமராஜபுரம்,ராமகிருஷ்ணபுரம், மகாத்மா காந்தி சாலை,வையாபுரி நகர், கோவை சாலை போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்
குறையும்.
 
மேலும், சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்து, கரூர் நகரில் ஜவுளி நிறுவனங்களுக்கு பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யவும், நிறுவனங்களில் பணிபுரியும்  பணியாளர்கள் எளிதாக சென்றுவர உபயோகமாக இருக்கும்.
 
மேலும் சாலைப் பணி எந்த அளவு முடிவு பெற்று உள்ளது, அம்மா சாலைப் பணி விரைவாக நடந்து வருகிறது என்று அலுவலர்களிடம் கேட்டறிந்த அமைச்சர் பின்னர் அம்மா சாலைப் பணியை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 9,746 பேருக்கு கொரோனா பாதிப்பு'