Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (13:25 IST)
சீனாவில் மிக அதிகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து இந்தியாவிலும் பரவலாம் என்ற காரணத்தினால் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசு விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதும் பள்ளி கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களில் மாஸ்க் அணிதல் கட்டாய படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சற்று முன் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் பேட்டி அளித்தபோது புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு என தனியாக கட்டுப்பாடு எதுவும் இல்லை என்றாலும் தனிமனித கட்டுப்பாடு அவசியம் என்று தெரிவித்துள்ளார் 
 
2 ஆண்டுகளுக்கு முன் விதிக்கப்பட்ட மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகிய கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளவில்லை என்றும் அவை தொடர்ந்து நடைமுறையில் தான் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் தனிமனித கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருந்தால் நமக்கும் நல்லது நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் நல்லது என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments