இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தப்ப உதவியது யார்? கடம்பூரார் சரண்டர்!

Webdunia
சனி, 4 ஜூலை 2020 (13:42 IST)
என்னையும் ஆய்வாளர் ஸ்ரீதரையும் தொடர்புபடுத்தி பேசுவது தவறானது என கடம்பூர் ராஜு விளக்கம். 
 
சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் கவனத்தை பெற்றது. இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன் வந்து விசாரித்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடவடிக்கை எடுக்க சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டது. 
 
இதுகுறித்து உடனடி விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி சம்பந்தப்பட்ட காவலர்களை கைது செய்தது. இந்நிலையில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மட்டும் சிபிசிஐடியிடம் சிக்காமல் தப்பி வந்த நிலையில், கயத்தாறு அருகே தப்பி சென்று கொண்டிருந்த அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.  
 
தற்போது இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தப்பிசெல்ல அரசியல் பிரமுகர் ஒருவர் உதவி செய்து வந்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ சாத்தான்குளம் வழக்கில் கைதான ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார். மேலும், என்னையும் ஆய்வாளர் ஸ்ரீதரையும் தொடர்புபடுத்தி பேசுவது தவறானது எனவும் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments