Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.138 கோடியில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்க உள்ளதாக அமைச்சர் கே. என்.நேரு தெரிவித்துள்ளர்.

J.Durai
திங்கள், 23 செப்டம்பர் 2024 (13:23 IST)
திருச்சி அரிஸ்
டோ ரவுண்டானா  அருகில் உள்ள ரயில்வே மேம்பாலம்  ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. 
 
பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் இதை மாற்ற அரசு திட்டமிட்டு ,பணிகள் குறித்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. 
 
ஏற்கனவே இந்த இடத்தில் பாலம் செயல்பாடு உள்ள நிலையில் தற்போது அதன் அருகில் புதிய பாலம் கட்டப்படுவதற்காக திட்டமிட்டுள்ளது.
ரூ.138 கோடி செலவில் புதிய பாலம் கட்டும் பணிகளை ஆய்வு மற்றும் போக்குவரத்து மாற்றம் குறித்து தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார்.
 
திருச்சி தலைமை தபால் நிலையத்திலிருந்து ஜங்ஷன் அரிஸ்டோர் ரவுண்டானா வரை போக்குவரத்து மாற்றம் குறித்து காவல்துறை அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியருடன்  ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கள ஆய்வின் போது திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாநகர மேயர் மு.அன்பழகன், 
மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் உடனிருந்தனர். 
 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-
 
திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்கான பணிகள் இன்னும் ஓரிரு நாளில் துவங்க உள்ளது.
 
இந்த நிலையில் எடமலைப்பட்டி புதூரில் இருந்து வரும் வாகனங்கள், சென்னையில் இருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்கள், டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து காஜாமலை பகுதிக்கு செல்லும் வாகனங்கள் எந்த வழியில் செல்ல வேண்டும், அதற்காக அகலப்படுத்தும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுள்ளது என்று கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments