Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக்ஸிங் மாஸ்டரை குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்! – வைரலான வீடியோ!

Webdunia
திங்கள், 3 பிப்ரவரி 2020 (12:52 IST)
குத்துச்சண்டை போட்டி ஒன்றில் விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் கையில் க்ளவுசை மாட்டுக்கொண்டு கோதாவில் இறங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு குத்துச்சண்டை அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். மிகவும் ஜாலி பேர்வழியான ஜெயக்குமார் கையில் பாக்ஸிங் க்ளவுஸ்களை கட்டிக்கொண்டு அங்கு இருந்த் பாக்ஸிங் மாஸ்டருடன் குத்துச்சண்டை போட்டுள்ளார்.

அமைச்சரை தாக்க கூடாது என பாக்ஸர் தடுக்க மட்டும் முயற்சி செய்ய, இதுதான் சான்ஸ் என்று குமுறி விளையாடியிருக்கிறார் அமைச்சர். இயல்பாகவே மிகவும் ஜாலியாக பேசக்கூடியவரான அமைச்சர் ஜெயக்குமார் இதற்கு முன்னர் ஒரு விழா மேடையில் எம்ஜிஆர் பாடல் பாடியது வைரலானது. ஒரு மேடை பேச்சின் போது ‘எனக்கு பாக்ஸிங் தெரியும்’ என ஜெயக்குமாரே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்துவிட்டார்.. திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து சித்தர்..!

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. ரெய்டு சென்ற போலீஸ் அதிகாரி படுகாயம்..!

இளைஞரின் செல்போனை திருடிய குரங்கு.. கால் அட்டெண்ட் செய்து பேசியதா?

இன்று இரவுக்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை அலெர்ட்!

வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments