Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு காமெடி நடிகர்: முன்னாள் அமைச்சர் விமர்சனம்

Webdunia
வெள்ளி, 27 டிசம்பர் 2019 (19:04 IST)
தினசரி செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் அமைச்சர் ஜெயக்குமாரை, ஒரு காமெடி நடிகர் என திமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அமைச்சர் ஜெயக்குமார் நேற்று பேட்டி அளித்த போது ’30 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரிய கிரகணம் வருவதுபோல் திமுகவும் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘நான் அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற படத்தை பார்த்திருக்கிறேன். ஆனால் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆட்சியில் ’அலிபாபாவும் 33 திருடர்களும்’ இருக்கின்றார்கள் என அமைச்சர்களை அவர் திருடர் என்று விமர்சனம் செய்தார் 
 
மேலும் ஒரு திரைப்படத்தில் பல்வேறு விதமான நடிகர்கள் இருப்பார்கள், அது போல் இந்த அலிபாபா கூட்டத்தில் உள்ள காமெடி நடிகர் தான் அமைச்சர் ஜெயகுமார். காமெடி நடிகர் கூறுவதற்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது’ என்று கூறியுள்ளார் 
 
அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமாரை காமெடி நடிகர் என்று எ.வ.வேலு அவர்கள் விமர்சனம் செய்ததற்கு அமைச்சர் ஜெயக்குமார் என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணியை பற்களால் நாத்தனார்.. உயர்நீதிமன்றம் அளித்த வித்தியாசமான தீர்ப்பு..!

மனைவியை காதலருக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. தியாகி பட்டம் தந்த கிராமத்தினர்..!

தமிழகத்தின் புதிய பாஜக தலைவர் நாளை அறிவிப்பா? அண்ணாமலை விளக்கம்..!

நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? காவல்துறை விளக்கம்..!

மாதவிடாயால் ஒதுக்கப்பட்ட மாணவி? பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட்! - காவல்துறை அளித்த விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments