Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழுவுற மீனில் நழுவுற மீன் தான் நடிகர் ரஜினிகாந்த்: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

Webdunia
ஞாயிறு, 21 அக்டோபர் 2018 (10:41 IST)
சபரிமலை விவகாரத்தில் பட்டும் படாமல் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தை அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்து பேசியுள்ளார்.
 
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவிலுக்குள் செல்ல முற்படும் பெண்களை தடுத்து நிறுத்தியும் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது.
 
இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், சபரிமலை விவகாரத்தில் பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்பதில் வேறு கருத்து இல்லை.  ஆனால், காலம் காலமாக பின்பற்றப்படும் ஐதிகம் பாதுகாக்கப்பட வேண்டும். சடங்குகளில் நீதிமன்றம் தலையிடாமல் இருப்பது நல்லது என தெரிவித்தார்.
 
இந்நிலையில் ரஜினியின் கருத்திற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், ஒரு விஷயத்தில் தீர்க்கமான கருத்தை தெரிவிக்கக் கூட தைரியமில்லாத ரஜினிகாந்தை மக்கள் எப்படி ஒரு தலைவனாக ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. இவரது கருத்து பல விஷயத்தில் கழுவுற மீனில் நழுவுற மீன் மாதிரி தான் இருக்கிறது என ஜெயக்குமார் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments