Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் நிலை என்ன? அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி..!

Mahendran
திங்கள், 1 ஏப்ரல் 2024 (10:19 IST)
கச்சத்தீவு விவகாரம் தற்போது மீண்டும் சூடு பிடிக்கும் நிலையில் கச்சத்தீவு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் நிலை என்ன? என அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கச்சத்தீவு விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் ட்வீட்டை தொடர்ந்து அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்  அளித்துள்ளார். அதில் கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவும், காங்கிரசும் தங்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை என்ற அணுகுமுறையை கடைபிடித்தனர்.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு 21 முறை பதிலளித்துள்ளேன். 1974-ல் ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களின் உரிமை பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகளில் மற்றொரு ஒப்பந்தம் மூலமாக அந்த உரிமைகள் பறிக்கப்பட்டன"

கச்சத் தீவு இறையாண்மை இந்தியாவுக்கே உரியது என 1958ல் அன்றைய அட்டர்னி ஜெனரல் செதால்வத் கூறினார் என அமைச்சர் ஜெய்சங்கர் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் 6,184 பேரை இதுவரை இலங்கை அரசு கைது செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக 5 ஆண்டுகளாக குரல் எழுப்பப்பட்டு வந்தது. 1974 ஒப்பந்தப்படி இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவில் மீன் பிடிக்க உரிமை உள்ளது எனவும் அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

ALSO READ: இன்று ஒரே நாளில் ரூ.680 உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.52,000ஐ நெருங்கியது..!

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments