Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 தேர்வு எப்போது? முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (11:31 IST)
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்துவது எப்போது என்பது குறித்த ஆலோசனையில் முதல்வர் முக ஸ்டாலின் உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
பிளஸ் டூ மாணவர்களுக்கு இதுவரை செய்முறை தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டு உள்ள நிலையில் எழுத்து தேர்வு நடத்துவது குறித்து அமைச்சர் முதல்வருடன் ஆலோசனை செய்து வருகிறார் 
 
சமீபத்தில் மத்திய கல்வி துறை அமைச்சருடன் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்ச்ர் அன்பில் மகேஷ் தற்போது முதல்வருடன் ஆலோசனை செய்து வருவதாகவும் இதனால் பிளஸ் டூ தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 
ஆனால் அதே நேரத்தில் சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவ்வாறு அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டால் தமிழகத்திலும் பிளஸ்டூ தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments