’சேகுவேரா’ சாமி ’காஸ்ட்ரோ’ செல்வம் – ஈபிஎஸ் ஓபிஎஸ்ஸை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2018 (10:51 IST)
தமிழநாட்டு முதல்வர் இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் படங்களை சேகுவேரா மற்றும் பிடல் காஸ்ட்ரோ படங்களைப் போல மார்ஃப் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.


அதிமுக அமைச்சர்கள் எதாவது கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினாலோ அல்லது பத்திரிக்கையாளர்களை சந்த்திது பேசினாலோ அடுத்த தினம் மீம் கிரியேட்டர்களுக்குக் கொண்டாட்டமாக மாறிவிடுகிறது.

அதிலும் அதிமுகவின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீம் கிரியேட்டர்களின் செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறார். அவர் எது கூறினாலும் அதைப்பற்றி மீம் கிரியேட் செய்து வைரல் ஆக்குவது மீம் கிரியேட்டர்களின் வாடிக்கை.

அதேபோல தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் முதல்வர் மற்றும் துணைமுதல்வர் இருவரையும் மாறிமாறி புகழந்து தள்ளினார். அப்போது ’சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ போல தமிழக மக்களுக்காக போராடுபவர்கள் தமிழக முதல்வரும் துணைமுதல்வரும்’ என வர்ணித்தார்.

அதுமட்டுமின்றி "முதல்வரும், துணை முதல்வரும் இரட்டை இலையை மீட்டெடுத்து இரட்டைகுழல் துப்பாக்கியாக செயல்படுகின்றனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

முதல்வர் மற்றும் துணைமுதல்வர் இருவரையும் சே குவேராவோடும் காஸ்ட்ரோவோடும் ஒப்பிட்டு பேசியது அன்றே பலரால் கேலி செய்யப்பட்டது. தற்போது அடுத்த கட்டத்துக்குச் சென்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரது படங்களையும் சே குவரா மற்றும் காஸ்ட்ரோ படத்தைப் போல மார்ஃப் செய்து பரப்பில் வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments