Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அமைச்சருடனான சந்திப்பு ஆறுதல் அளிப்பதாக இருந்தது.. திருமாவளவன்

Mahendran
செவ்வாய், 10 டிசம்பர் 2024 (20:44 IST)
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அவர்களை இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்தித்து மதுரை அருகே நிறைவேற்றப்பட உள்ள டங்ஸ்டன் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மனு ஒன்றை அளித்தார் அதன் பின்னர் அவர் தனது சமூக வலைதளத்தில் மத்திய அமைச்சருடனான சந்திப்பு ஆறுதல் அளிப்பதாக உள்ளது என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
இந்திய ஒன்றிய அரசின் சுரங்கத்துறை அமைச்சர் மாண்புமிகு கிஷன்ரெட்டி அவர்களைச் சந்தித்து, மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள நாயக்கர்பட்டியில் "டங்க்ஸ்டன் சுரங்கம்" அமைப்பதைக் கைவிடக் கோரி இன்று மனு ஒன்றை அளித்தேன்.
 
அதனைப் பெற்றுக்கொண்ட அவர், தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் இந்திய ஒன்றிய அரசு எதுவும் செய்யப்போவதில்லை என உறுதியளித்தார். 
 
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தனது பார்வைக்கு வந்ததாகவும் கூறினார். அத்துடன்,  தமிழ்நாட்டு மக்களோடு நாங்கள் இருப்போம்; கவலை வேண்டாமென்றும் கூறினார்.
 
அமைச்சருடனான சந்திப்பு ஆறுதல் அளிப்பதாக இருந்தது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விசிக பெண் கவுன்சிலர் கத்தியால் குத்தி கொலை.. சென்னை அருகே பதட்டம்..!

ரூ.10 லட்சம் கடன்! ஒரே மாதத்தில் அடைக்க உதவிய AI - அமெரிக்காவில் நடந்த ஆச்சர்ய சம்பவம்!

வடமாநிலங்களில் மழை! உயரத் தொடங்கும் தக்காளி விலை! - இன்றைய நிலவரம்!

பொதுத்துறை வங்கிகளில் 1007 சிறப்பு அதிகாரி பணியிடங்கள்! - விண்ணப்பிப்பது எப்படி?

பாஜக தலைவராகிறாரா நிர்மலா சீதாராமன்? போட்டியில் வானதி ஸ்ரீனிவாசன்?

அடுத்த கட்டுரையில்
Show comments