Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ ஊசி போட்டு மாணவர் தற்கொலை: போலீஸார் கண்டெடுத்த தற்கொலை கடிதம்,,, விசாரணையில் தெரிய வந்தது என்ன??

Arun Prasath
வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (14:07 IST)
மதுரை மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துள்ளார்.

விருத்தாச்சலம் பகுதியைச் சேர்ந்த உதயராஜ் என்பவர், மதுரை மருத்துவக்கல்லூரியில் எம்.டி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு வயது 29. இவர் மதுரை முனிசிபல் காலனியில் உள்ள ஒரு வீட்டில், நண்பர் ராஜேஸுடன் தங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு உதயராஜின் நண்பர் ராஜேஸ், வேலைக்கு சென்று விட்ட நிலையில், உதயராஜ் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அதிகாலை வீட்டின் உரிமையாளர் விஜயகுமார், உதயராஜின் வீட்டின் கதவை வெகு நேரம் தட்டியிருக்கிறார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விஜயகுமார் போலீஸுக்கு தகவல் தெரிவித்தார்.

இதன் பிறகு போலீஸார் உதயராஜின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு உதயராஜ் பிணமாக கிடந்தார். அவர் உடலுக்கு அருகே ஊசி மற்றும் மருந்துகள் சிதறி கிடந்தன. இதனையடுத்து முதற்கட்ட விசாரணையில் உதயராஜ் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

போலீஸார் உடனடியாக அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உதயராஜின் உடலை கொண்டு சென்றனர். இதனிடையே உதயராஜ் தங்கி இருந்த அறையில் இருந்து போலீஸாருக்கு கடிதம் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் பணி பளு காரணமாக தற்கொலை செய்து கொன்றதாக குறிப்பிட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

வேதனையும் பெருமையும்.. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து முதல்வர் ஸ்டாலின்..!

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

5 நாட்களில் 3,932.86 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. ரூ.9 லட்சம் கோடி வரை இழந்த முதலீட்டாளர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments