Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வார்டில் வேலை பார்க்க மாட்டேன்! – சானிட்டைசரை குடித்த பெண் ஊழியர்!

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (12:37 IST)
விழுப்புரத்தில் கொரோனா வார்டில் பணியாற்ற மறுத்து ஊழியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் சில பகுதிகளில் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரொனா வார்டில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவர் தான் இனி கொரோனா வார்டில் பணிபுரிய முடியாது என கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு மேல் அதிகாரிகள் மறுத்ததால் மனமுடைந்த அவர் அங்கிருந்த சானிட்டைசரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவருக்கு உடனடியாக மீட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நேர கட்டுப்பாடு.! காலை 9.15-க்குள் வராவிட்டால் என்னவாகும் தெரியுமா.?

பஞ்சாப் எல்லையில் பறந்த மர்ம ட்ரோன்.. சீனாவை சேர்ந்ததா?

குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது சினிமா டைட்டிலில் மட்டும் தான்: ராமராஜன் கண்டனம்..!

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு.! திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments