Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு.. 10,462 இடங்கள்.. 42,236 மாணவர்கள் போட்டி..!

நாளை முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ்  கலந்தாய்வு.. 10,462 இடங்கள்.. 42,236 மாணவர்கள் போட்டி..!

Siva

, செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (17:47 IST)
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு நாளை முதல் கலந்தாய்வு தொடங்கும் நிலையில் மொத்தம் 10 ஆயிரம் இடங்களுக்கு 40 ஆயிரம் மாணவர்கள் போட்டியிடுகின்றனர் என்றும் அதாவது ஒரு இடத்திற்கு நான்கு மாணவர்கள் போட்டியிடுகிறார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி, 22 தனியார் மருத்துவக் கல்லூரி, மூன்று அரசு பல் மருத்துவமனை கல்லூரி, 20 தனியார் மருத்துவமனை கல்லூரிகள் உள்ள நிலையில் இந்த கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நாளை முதல் கலந்தாய்வு தொடங்குகிறது.

ஏற்கனவே ஆன்லைனில் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் பணி முடிவடைந்துள்ள நிலையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியானது. இந்த நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை சுகாதார துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் தொடங்குகிறது.

அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தரவரிசை பட்டியல் படி மாணவர்கள் தேர்வு செய்ய உள்ளனர். நாளை முதல் ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை ஆன்லைனில் கலந்தாய்வுக்கான கட்டணத்தை பதிவு செய்து தங்களுக்கான இடங்களை தேர்வு செய்யலாம் என்றும் 28ஆம் தேதி தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லூரிகள் இடங்கள் ஒதுக்கீடு  செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 10,462 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. ஆனால் தரவரிசைப் பட்டியலில் 42,236 மாணவ, மாணவிகள் இடம் பெற்றுள்ளனர் என்பதும், அதாவது ஒரு இடத்திற்கு 4 மாணவர்கள் போட்டியிடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாளையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் அவரது சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை!