Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகன்களை குறி வைத்துக் கொல்லும் மசினி யானை! – முதுமலையில் அதிர்ச்சி!

Advertiesment
Elephant
, வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (10:49 IST)
முதுமலை யானை வளர்ப்பு முகாமில் பாகனை மசினி என்ற யானை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யானைகள் சரணாலயமான முதுமலையில் ஏராளமான யானைகள் பாதுகாக்கப்படும் நிலையில், பயிற்றுவிக்கப்பட்ட யானைகள் முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அங்கு பராமரிக்கப்படும் மசினி என்ற யானைக்கு அதன் பாகன் பாலன் என்பவர் உணவளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென மசினி அவரை தாக்கியுள்ளது. இதனால் படுகாயமடைந்த அவர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 2019ம் ஆண்டில் சமயபுரம் கோவிலில் இருந்த மசினி யானை அந்த கோவிலின் யானை பாகனை தாக்கி கொண்றதால் முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் இங்கேயும் மசினி பாகனை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

7000 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு.. ஆனால் உயிர்ப்பலி 44: இந்திய கொரோனா நிலவரம்..!