Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேலம் பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த மன்சூர் அலிகான் கைது

Webdunia
ஞாயிறு, 17 ஜூன் 2018 (09:24 IST)
சென்னை - சேலம் இடையே மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலைத் திட்டத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் அமைய உள்ள இந்த திட்டத்தால் ஏராளமான விளை நிலங்கள் பாதிக்கப்படும் என தெரிகிறது. 
இந்நிலையில், பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த திட்டத்தினால் கோடிக்கணக்கான மரங்கள் அழிக்கப்படும் நீராதாரமும் பாதிக்கப்படும் என்பதால் இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 
 
அதையும் மீறி தங்களது நிலம் கைப்பற்றப்படுமானால், முதல்வர் வீட்டின் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்வதை தவிர வேறு வழியே இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய நடிகர் மன்சூர் அலிகான், சேலத்தில் எட்டு வழிச்சாலை அமைந்தால்  மக்கள் வாழ முடியாது. எட்டு வழிச்சாலை அமைத்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். அதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அதனால் மத்திய, மாநில அரசுகள் இவற்றை செயல்படுத்தக்கூடாது. 
மேலும் அதற்கான போராட்டங்கள் நடைபெற்றால் அதில் நான் கட்டாயம் கலந்து கொள்வேன். எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன் என ஆவேசமாக பேசினார். 
 
இதனையடுத்து பசுமை வழிச்சாலைக்கு எதிராக கருத்து தெரிவித்த, நடிகர் மன்சூர் அலிகானை சென்னை சூளைமேட்டில், இன்று அதிகாலை சேலம் போலீஸார் கைது செய்து விசாரணைக்காக சேலத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று உருவாகிறது புயல் சின்னம்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

மகாராஷ்டிரா, ஜார்கண்ட்.. இரு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை.. வயநாடு நிலவரம்..!

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments