Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்சேதுபதிக்கு எதிரான போராட்டம்: மண்டி நிறுவனம் விளக்கம்

விஜய்சேதுபதிக்கு எதிரான போராட்டம்: மண்டி நிறுவனம் விளக்கம்
, செவ்வாய், 5 நவம்பர் 2019 (20:36 IST)
மக்கள் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான மண்டி என்ற நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்தது குறித்து வணிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர். ஆன்லைன் வியாபாரத்தால் வணிகர்களின் வியாபாரம் பெருமளவு பாதிக்கப்பட்டு வரும் நிலையில் விஜய் சேதுபதி போன்ற பெரிய நடிகர்கள் இதுபோன்று ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவித்து, வணிகர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினார் 
 
இதனையடுத்து இன்று விஜய்சேதுபதியின் அலுவலகம் அருகே வணிகர்கள் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தால் விஜய் சேதுபதி அலுவலகம் உள்ள விருகம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி சுமார் 200 வணிகர்களை கைது செய்தனர் 
 
இந்த நிலையில் விஜய் சேதுபதி செயலிக்கு சொந்தமான மண்டி நிறுவனம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி மீது வணிகர்கள் சுமத்தும் குற்றச்சாட்டு தவறானது என்றும், விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் பலனளிக்கும் என்பதாலேயே இந்த விளம்பரத்தில் நடிக்க விஜய்சேதுபதி சம்மதம் தெரிவித்தார் என்றும் இந்த செயலியினால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வருமான வாய்ப்பு அதிகரிக்கும் என்றும், அவ்வாறு அதிகரிக்கும் நோக்கில் தான் இந்த விற்பனை தளம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இதனை வணிகர்கள் சரியாக புரிந்து கொள்ளாமல் இந்த செயலீயில் நடித்த விஜய் சேதுபதிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதாகவும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்த விளக்கத்தை வணிகர்கள் ஏற்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''நீட் தேர்வு அரசாங்க மருத்துவர்களின் எண்ணிக்கையை குறைக்கும்''