Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளுக்கே பாலியல் தொல்லை – குடிகார தந்தைக்கு நேர்ந்த நிலை !

Webdunia
வியாழன், 27 பிப்ரவரி 2020 (14:47 IST)
கொலை செய்யப்பட்ட படவெட்டி

மேட்டூர் அருகே குடிபோதையில் தனது மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேட்டூரை அடுத்த ஜலகண்டபுரம் ஆவடத்தூரை சேர்ந்தவர் படவெட்டி. இவர் மனைவி நிலாவைப் பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம்தான் அவரை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் நிலா.

இந்நிலையில் இன்று காலை அவர் தலை நசுங்கிய நிலையில் வீட்டுக்கு வெளியே இருந்த கட்டிலில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் அறிந்து அங்கு வந்த போலீஸார் நடத்திய விசாரணையில் ‘முந்தைய தினம் குடிபோதையில் வந்த படவெட்டி, தன் மூத்த மகளிடம் அத்துமீறி பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் கிரைண்டர் கல்லை தலையில் தூக்கிப் போட்டு தந்தையைக் கொலை செய்துள்ளார்’ எனத் தெரிவித்தனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்