ஆளை சுருட்டிய மலைப்பாம்பு; விரைந்து மீட்ட தீயணைப்பு வீரர்கள்! – அதிர்ச்சியளிக்கும் வீடியோ!

Webdunia
புதன், 30 நவம்பர் 2022 (13:38 IST)
திருப்பத்தூர் மாவட்டத்தில் மலையடிவாரம் அருகே மலைப்பாம்பு ஒரு மனிதரை பிடித்து சுருட்டிய நிலையில் தீயணைப்புத்துறையினர் மீட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கைலாசகிரி மலை உள்ளது. இதன் அடிவாரப்பகுதியில் பொதுமக்கள் பலர் வாழ்ந்து வரும் நிலையில் மலைவாழ் ஜந்துக்களின் குறுக்கீடு அவ்வப்போது அங்கு நிகழ்வது உண்டு.

இந்நிலையில் மலையடிவாரத்தில் மலைப்பாம்பு ஒன்று நபர் ஒருவரை பிடித்து சுருட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்து உடனடியாக அவ்விடம் விரைந்த தீயணைப்பு வீரர்கள் அந்த நபரை மலைப்பாம்பிடம் மீட்டுள்ளனர். பின்னர் மலைப்பாம்பை பத்திரமாக கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எக்ஸ் ரே அறையில் இளம்பெண்ணை ரகசியமாக வீடியோ எடுத்த டிரைவர்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

போர் குறித்து டிரம்பிடம் எந்தவித திட்டமிடலும் இல்லை.. பின்லேடனை வேட்டையாடிய முன்னாள் சிஐஏ இயக்குனர் விமர்சனம்..!

இனிமே இருக்கு உங்களுக்கு!.. ஊழல் லிஸ்ட் என்கிட்ட இருக்கு!.. திமுகவை மிரட்டும் வேல்முருகன்!...

இந்திய அரசாங்கத்தில் 8931 நாள் பதவி வகித்த மோடி.. புதிய சாதனை..!

இந்தியாவை ஒருபோதும் மறக்க மாட்டோம்.. ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments