Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பமாக இருந்த மனைவியைக் கொன்ற கணவன் – எதற்குத் தெரியுமா ?

Webdunia
வெள்ளி, 25 அக்டோபர் 2019 (10:25 IST)
வேடச்சந்தூரில் கர்ப்பமாக இருந்த தனது மனைவியைக் கள்ளக்காதலிக்காக கொலை செய்துள்ளார் ஒரு கொடூர கணவன்.

வேடச்சந்தூரைச் சேர்ந்த தம்பதிகள் தினேஷ் குமார் மற்றும் சுஷ்மிதா. இவர்கள் இருவரும் காதலித்து 3 வருடங்களுக்கு முன்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்நிலையில் தினேஷும் தனது மாமனார் வீட்டிலேயே தங்கி மனைவியோடு சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையில் எதிர்பாராத விதமாக தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது சுஷ்மிதாவுக்குத் தெரிந்துள்ளது.

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் இந்த  சம்பவம் புயலாக வீசியுள்ளது. தினேஷ் குமாருக்கும் அவரது காதலிக்கும் இரு குழந்தைகள் இருப்பதுவும் தெரிந்து சுஷ்மிதா அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். இதையடுத்து அவரைக் கண்டித்து சண்டை போட்டு காதலியைப் பார்க்க செல்லாமல் இருக்க சம்மதம் வாங்கியுள்ளார். ஆனால் தினேஷ்குமாரோ காதலியிடம் தொலைபேசி வாயிலாக பேசி காதலை வளர்த்துள்ளார்.

ஒரு கட்டத்தில் காதலியும் தினேஷும் அவரது மனைவியைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக சுஷ்மிதாவை தனியாக அழைத்துச் சென்று யாருமில்லாத பகுதியில் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார் தினேஷ். பின்னர் நகைக்காக கொலை நடந்தது போல உறவினர்களை ஏமாற்ற சில நகைகளையும் எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் போலிஸார் நடத்திய விசாரணையில் முன்னுக்குப் பின் முரனாகப் பேசி மாட்டியுள்ளார். அவரைக் கைது செய்த போலிஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments