Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுற்றுலா பயணிகள் விரும்பும் இடம்..! – தாஜ்மஹாலை பின்னுக்கு தள்ளிய மாமல்லபுரம்!

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (12:22 IST)
கடந்த 2021-22ம் ஆண்டில் வெளிநாட்டு பயணிகளால் அதிகம் சுற்றிபார்க்கப்பட்ட இந்திய சுற்றுலா தளங்களில் மாமல்லபுரம் முதல் இடத்தை பெற்றுள்ளது.

இந்தியா முழுவதும் வரலாற்று சிறப்புமிக்க பல சுற்றுலா தளங்கள் உள்ள நிலையில், வெளிநாட்டு பயணிகள் பலர் இந்த பகுதிகளை காண ஆண்டுதோறும் அதிக அளவில் வந்தபடி உள்ளனர். கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகளின் வரத்து வெகுவாக குறைந்தது.

இந்நிலையில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டன. கடந்த 2021-22ல் அதிகமான வெளிநாட்டு பயணிகள் சுற்றி பார்த்த சுற்றுலா தளங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் ’இந்தியா வந்த வெளிநாட்டு பயணிகளில் 45.5% (1,44,984 பேர்) மாமல்லபுரத்தை பார்வையிட்டுள்ளனர். தாஜ்மகாலை பார்த்தவர்கள் 12.21% (38,922) மட்டுமே. தாஜ்மகாலுக்கு இணையான வெளிநாட்டவர்கள் (25,579 பேர்) சாளுவன்குப்பம் புலிக்குடைவரையை பார்வையிட்டுள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by : Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

உலகில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை? எங்கே தெரியுமா?

வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments