Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் பகுதிகளை இணைக்கும் ரஷ்யா.. அமெரிக்கா கடும் கண்டனம்!

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (11:57 IST)
உக்ரைனில் ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை இன்று ரஷ்யா தனது நாட்டுடன் இணைக்கிறது.

உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி 6 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையிம் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து நடந்து வரும் போரால் இரு தரப்பு ராணுவ வீரர்களும் உயிரிழந்து வருவதுடன், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

6 மாத காலத்திற்கும் மேலாக போர் நடத்தி வரும் நிலையில் உக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் உக்ரைனிடம் ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளான லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய பிராந்தியங்களை இன்று அதிகாரப்பூர்வமாக ரஷ்யாவுடன் இணைக்க இன்று கையெழுத்திடப்படுகிறது.

இதற்கு அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பேசியுள்ள அமெரிக்க உள்துறை செயலாளர் ஆண்டனி ப்ளிங்டன், சர்வதேச விதிகளின்படி ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையானது சட்ட விரோதமானது. உக்ரைனிடமிருந்து ஆக்கிரமித்த 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக் கொள்வதை அமெரிக்கா ஒருபோதும் அங்கீகரிக்காது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments