Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுவானில் பயணிக்கு மாரடைப்பு.. சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2023 (15:22 IST)
நடுவானில் விமான பயணி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. மலேசியாவில் இருந்து கோலாலம்பூர் ஏர் ஆசியா என்ற விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென அந்த விமானத்தில் பயணம் செய்த பயணம் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 
 
அந்த நேரத்தில் விமானம் சென்னை அருகே பறந்து கொண்டிருந்ததை அடுத்து சென்னையில் விமானம் தரையிறங்க அனுமதி கேட்கப்பட்டது. இதனை அடுத்து உடனடியாக அந்த விமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து சென்னையில் கோலாலம்பூர் ஏரி ஏசியா விமானம் தரையிறக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்ட பயணி உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகிகள். தற்போது அந்த பயணியின் உடல் சீராக இருப்பதாகவும் அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்த சென்னையில் அவசரமாக தரையறுக்கப்பட்ட விமானம் அதன் பின் மீண்டும் பறந்து சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசைக்காட்டி மோசம் செய்த ஆசிரியர்.. மாணவி கர்ப்பமானதும் எஸ்கேப்! - கைது செய்த போலீஸ்!

’கரகாட்டக்காரன்’ கார் போல் அரசு பேருந்து சக்கரம் கழன்று சாலையில் ஓடியதால் அதிர்ச்சி..!

முன்னாள் டிஜிபியை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

முதல்முறையாக ரூ.72 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments