Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு சிறப்பு ஏசி பேருந்துகள்: போக்குவரத்து துறை அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (18:42 IST)
கோடை காலம் தொடங்கி விட்டதை அடுத்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் ஆவதை அடுத்து மதுரை முதல் கொடைக்கானல் வரை சிறப்பு ஏசி பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த சிறப்பு ஏசி பேருந்துகள் மதுரை ஆரப்பாளையம் முதல் கொடைக்கானல் வரை செல்லும் என்றும் இந்த பேருந்துகளில் கட்டணம் ரூபாய் 150 வசூலிக்கப்படும் எனும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதிகாலை 4:45 மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பும் இந்த பேருந்து 8.30 மணி அளவில் கொடைக்கானல் செல்லும் என்றும் அதேபோல் காலை 9:30 மணிக்கு கொடைக்கானலில் இருந்து புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு ஆரப்பாளையம் வந்து சேரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த பேருந்து இடைநில்லாபேருந்து என்பதால் மதுரையிலிருந்து நேரடியாக கொடைக்கானல் செல்லும் என்றும் பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மூலம் நடிகையருக்கு கோகைன் விற்றேஎன்: கைதான கெவின் வாக்குமூலம்..!

விசிக பெண் கவுன்சிலர் கத்தியால் குத்தி கொலை.. சென்னை அருகே பதட்டம்..!

ரூ.10 லட்சம் கடன்! ஒரே மாதத்தில் அடைக்க உதவிய AI - அமெரிக்காவில் நடந்த ஆச்சர்ய சம்பவம்!

வடமாநிலங்களில் மழை! உயரத் தொடங்கும் தக்காளி விலை! - இன்றைய நிலவரம்!

பொதுத்துறை வங்கிகளில் 1007 சிறப்பு அதிகாரி பணியிடங்கள்! - விண்ணப்பிப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments