Publish Date: Mon, 17 Apr 2023 (13:47 IST)
Updated Date: Mon, 17 Apr 2023 (13:49 IST)
இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் முக கவசம் அணிந்து வர வேண்டியது கட்டாயம் என மதுரை ஐகோர்ட் அறிவித்திருந்த நிலையில் அந்த அறிவிப்பு அமலுக்கு வந்துள்ளது
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் தினசரி கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கிழமை நீதிமன்றங்களிலும் இன்று முதல் மாஸ்க் அணிந்து வருவது கட்டாயம் என மதுரை ஐகோர்ட கூறியிருந்தது.
இதனை அடுத்து நீதிமன்ற பணியாளர்கள் வழக்கறிஞர்கள் அலுவலர்கள் ஆகியோர் முக கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்ற வளாகத்தில் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட் உதவி பதிவாளர் உத்தரவிட்டு உள்ளார்.