Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை சித்த மருத்துவர் சுப்பிரமணியன் வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2020 (11:21 IST)
மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் உள்ளடங்கிய இம்ப்ரோ என்ற பொடியைத் தயாரித்துள்ளார். இந்தப் பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் இரு வேளை உணவு சாப்பிடுவதற்கு முன்பு குடித்து வந்தால் கொரோனா நோயிலிருந்து விடுபடலாம். இந்தப் பொடியை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் சுப்பிரமணியன் கடந்த சில நாட்களுக்கு மனு ஒன்றை தாக்கல் செய்தார்
 
இந்த மனுவை இன்று விசாரணை செய்த மதுரை உயர்நீதிமன்ற கிளை இதுகுறித்து ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனாவை தடுக்கும் திறன் மருத்துவர் சுப்பிரமணியன் கண்டுபிடித்த பொடியில் உள்ளதா? என்பதை ஆராய்ந்து ஆகஸ்ட் 3ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
 
மேலும் இந்திய பாரம்பரிய மருந்துகளுக்கு உரிய நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன் கண்டுபிடித்த பொடி, கொரோனாவை கட்டுப்படுத்துமா? என்பது வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி ஆயுஷ் அமைச்சகம் தாக்கல் செய்யும் அறிக்கையில் தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈவிஎம் மிஷின் மீது நம்பிக்கை இல்லை: வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி பிரசாரம்: கார்கே

டெல்டா மாவட்டங்களில் ரெட் அலெர்ட்! 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! - வானிலை ஆய்வு மையம்!

அதிகரிக்கும் கனமழை: சென்னையில் 24 மணி நேர ஆவின் பாலகங்கள்!

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments