Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஞ்சா நெஞ்சரை சேத்துக்கோங்க தலைவரே! – மதுரையில் தொண்டரின் போஸ்டர்!

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (11:33 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் மு.க.அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்த்துக் கொள்ள வலியுறுத்தி தொண்டர் ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாரிசுகளான மு.க.ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் இடையே சில ஆண்டுகள் முன்பு கட்சி ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் பிரச்சினைகள் ஏற்பட்டது. இந்நிலையில் மு.க.அழகிரி திமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து மதுரையில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வரும் அழகிரி அவ்வபோது திமுக குறித்த குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார். இந்நிலையில் தற்போது திமுக தொண்டர் ஒருவரால் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் வைராலாகியுள்ளன. அந்த போஸ்டரில் மறைந்த கருணாநிதி தனது மகன்கள் ஸ்டாலின் – அழகிரி இருவரது கைகளையும் இணைத்து வைக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

மேலும் அதில் “ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம், ஒரு தாயின் பிள்ளைகளே இருவரும் ஒன்று சேர வேண்டும். அதுவே தமிழகத்தின் எதிர்பார்ப்பு, இந்த தொண்டனின் எதிர்பார்ப்பு” என்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments