Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் என்ன பிரதமரா? வீடியோ எடுத்த பத்திரிக்கையாளரிடம் மதன் கோபம்!

Webdunia
சனி, 19 ஜூன் 2021 (08:36 IST)
பிரபல யுடியூபர் மதன் பாலியல் வன்முறை மற்றும் ஆபாசப் பேச்சு ஆகியக் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் விசாரணையில் உள்ளார்.

யூடியூபர் மதன் ஓபி சிறுவர் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாகவும் இளம் பெண்களை பாலியல் வன்முறைக்கு தூண்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மதன் தலைமறைவாக இன்று காலை அவரை தர்மபுரியில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை காவல் ஆணையர் அலுவலகம் கொண்டுவரப்பட்டார்.

அப்போது அவரை வீடியோ எடுத்த பத்திரிக்கையாளரிடம் ‘நான் என்ன பிரதமரா?’ எனக் கோபமாக கேட்டுள்ளார். மேலும் தன் குழந்தை மற்றும் மனைவியை விடுதலை செய்யும்படியும் போலிஸாரிடம் கெஞ்சி கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.  ஏற்கனவே மதனின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்