கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு, உயிரிழப்பு அதிகரித்த நிலையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் முன்னெடுப்புகளால் சமீப காலமாக குறைந்துள்ளது.
இந்நிலையில், ஜூன் 20 முதல் மேலும் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து பயணிகள் வருகை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு வரும் ஜூன் 20 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், எழும்பூர் – ராமேஸ்வரம், கோவை- நாகர்கோவில், மதுரை – திருவனந்தபுரம் , சென்னை – கொல்லம் செல்லும் ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.