Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுவராஜ் தாக்குதல் நடத்திய பிரியாணி கடைக்கு சென்ற மு.க.ஸ்டாலின்...

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (13:15 IST)
விருகம்பாக்கம் பகுதியில் திமுக பிரமுகர் யுவராஜ் தாக்குதல் நடத்திய பிரியாணி கடைக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார்.

 
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஆர்.ஆர்.அன்பு பிரியாணி உணவகத்தில் பிரியாணிக்காக திமுக நிர்வாகி யுவராஜ் நடத்திய குத்து சண்டைதான் தற்போது சமூக வலைத்தளங்களில் முக்கிய செய்தியாக இருக்கிறது. யுவராஜின் செயலை கிண்டலடித்து ஏராளமான மீம்ஸ்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது.அதோடு, ‘ஓசிபிரியாணிதிமுக’ என்கிற ஹேஷ்டேக் நேற்று டிவிட்டரில் ட்ரெண்டிங் ஆனது..
 
யுவராஜ் விருகம்பாக்கம் திமுக தொண்டரணி பகுதி நிர்வாகியாக இருக்கிறர். இந்த விவகாரம் பூதாகரம் ஆனதால், அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக திமுக தரப்பு அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், தலைமறைவாக உள்ள யுவராஜ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 
திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த வேளையில் இந்த சம்பவம் திமுக தரப்பிற்கும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், தாக்குதல் நடத்தப்பட்ட கடைக்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு சென்று கடையின் முதலாளி, நிர்வாகி, மற்றும் தாக்குதலால் காயமடைந்த ஊழியர்கலை சந்தித்து அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி தகுந்த தண்டனை கிடைக்கும் என அவர் உறுதி அளித்தார்.
 
மு.க.ஸ்டாலின் நேரில் வந்து தங்களுக்கு ஆறுதல் கூறியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என கடையின் நிறுவனர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிநபர்களை அனுமதிக்க கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு உள்துறை செயலாளர் உத்தரவு..!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு. தமிழக அரசு அறிவிப்பு..!

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments