Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக வேட்பாளர் - மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

Webdunia
சனி, 25 நவம்பர் 2017 (09:28 IST)
சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவுள்ளார்.


 
வருகிற டிசம்பர் மாதம் 21ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. எனவே, அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. அனைத்து கட்சிகளிலும் தங்கள் சார்பில் யாரை நிறுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.  
 
இந்த தேர்தலில் தான் போட்டியிடுவதாக ஏற்கனவே தினகரன் ஏற்கனவே அறிவித்துவிட்டார். மற்ற கட்சிகளும் விரைவில் அறிவிக்கவுள்ளன. 
 
இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், வட்டம், பகுதி நிர்வாகிகள் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது. ஆர்.கே. நகர் தேர்தலில் யாரை நிறுத்துவது என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் எனத் தெரிகிறது. 
 
ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது திமுக சார்பில் மருது கணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த முறை அவரையே நிற்க வைப்பார்களா இல்லை வேறு வேட்பாளரை நிறுத்துகிறார்களா என்பது இந்த கூட்டத்திற்கு பின் தெரிந்துவிடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

மழை வெள்ள பாதிப்பு.. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு..!

சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம்! தமிழக அரசு அறிவிப்பு..!

ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

மீண்டும் அதானி விவகாரம்.. மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments