Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதவாத சக்திகளை தமிழகத்திற்குள் நுழைய விடக்கூடாது என்பதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்- செல்வப் பெருந்தகை!

மதவாத சக்திகளை தமிழகத்திற்குள் நுழைய விடக்கூடாது என்பதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்- செல்வப் பெருந்தகை!

J.Durai

, வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (08:41 IST)
காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம்
விழுப்புரம் மத்திய, வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.
 
இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான  கு.செல்வப் பெருந்தகை  தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்
 
மாவட்ட தலைவர்கள் ஆர்.டி.வி.சீனிவாசக்குமார், ஆர்.பி.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் எம்.பி.க்கள் மாணிக்கம்தாகூர், விஷ்ணுபிரசாத், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார்,ரூபி மனோகரன், மாநில துணைத்தலைவர் குலாம்மொய்தீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 
அப்போது பேசிய செல்வப் பெருந்தகை.....
 
ஆர்ப்பாட்டம் 
மாவட்ட காங்கிரஸ் கமிட்டியை பலப்படுத்துவது. காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலிமைப்படுத்துவது என்ற நோக்கத்துடன் மாவட்டந்தோறும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
 
அமலாக்கத்துறை, மாநிலங்களில் உள்ள கட்சிகளை பழிவாங்குவதும், பா.ஜனதா அல்லாத மாநிலங்களின் முதல்வர்கள் மீது வழக்கு போடுவதையும், பா.ஜனதா அல்லாத தேசிய தலைவர்களை மிரட்டுவதையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். 
 
இதை கண்டித்து அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன்பு நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தை காங்கிரஸ் கட்சி நாளை (அதாவது இன்று) நடத்துகிறது. அதன்படி சென்னையில் மாலை 3 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
பங்குச்சந்தை ஊழலைப்பற்றி தெள்ளத் தெளிவாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எடுத்துக்கூறிய பிறகும்,கூட்டுப் பாராளுமன்ற குழுவை மத்திய அரசு நியமிக்கவில்லை. விசாரணையையும் தொடங்கவில்லை. இதை கண்டித்தும், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டியும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டியும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம்.
மதவாத சக்திகள்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஆண்டு இது. 10 முதல் 15 மாதங்களுக்கு முன்பே அவருக்கு நாணயம் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வைத்து, காலதாமதமாக 2 நாட்களுக்கு முன்பு ரூ.100 நினைவு நாணயத்தை அவரது நூற்றாண்டு நிறைவு விழாவில் வெளியிட்டிருக்கிறார்கள். மத்திய அரசு, நாணயத்தை வெளியிட்டிருக்கிறது. மாநில அரசு பெற்றுக் கொண்டிருக்கிறது. அதை நாங்கள் அப்படித்தான் பார்க்கிறோம். 
 
இது அரசு விழாவாக நடந்தது.
சென்னையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நாங்கள் சந்தித்து பேசிய போது கூட அவர் உறுதியாக இருக்கிறார், தெளிவாக இருக்கிறார். 
 
எந்த காரணத்தை கொண்டும் எந்த காலத்திலும் மதவாத சக்திகளை தமிழகத்திற்குள் நுழைய விடக்கூடாது என்பதில் காங்கிரஸ் பேரியக்கம் எப்படி உறுதியாக இருக்கிறதோ, அதுபோல முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
பூஜ்ஜியம்
தமிழகத்தில் பா.ஜனதா பூஜ்ஜியம்தான். அவர்கள் இங்கு ஒன்றும் செய்ய கிடையாது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் வாங்கிய வாக்குகள் எல்லாம் வன்னியர்கள், முதலியார் சமூகத்தின் குறிப்பிட்ட வாக்குகள், யாதவ சமூகத்தினர், தென்மாவட்டங்களில் ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரனுக்குரிய முக்குலத்தோர் வாக்குகள் என இதுபோன்ற எல்லா இடத்திலும் பெரும்பான்மை சாதியாக உள்ள தலைவர்களை தங்களுடன் இணைத்துக் கொண்டு அவர்களின் வாக்குகளை  பா.ஜனதா பெற்றுள்ளது. 
 
இது பா.ஜனதா வாங்கிய வாக்கு என்று கூறினால் யார் நம்புவார்கள். தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு ஓட்டு வங்கி கிடையாது என்பது மக்களுக்கு தெரியும்.
 என்று கூறினார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளிக் கல்வித்துறை வளர்ச்சிக்கு 44 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு-அமைச்சர் தங்கம் தென்னரசு!