Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனி எங்களுக்கு விஜயகாந்த் தேவையில்லை

இனி எங்களுக்கு விஜயகாந்த் தேவையில்லை

Advertiesment
விஜயகாந்த்

கே.என்.வடிவேல்

, வியாழன், 17 மார்ச் 2016 (22:45 IST)
இனி எங்களுக்கு விஜயகாந்த் தேவையில்லை என மக்கள் நலக்கூட்டணி முடிவு செய்துள்ளது.
 

 
தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, பாமக, மக்கள் நலக் கூட்டணி ஆகியவை தலைமையில் கூட்டணிகள் உதயமாகியுள்ளது.
 
இதில், தேமுதிகவை தங்களது கூட்டணிக்கு திமுகவும், மக்கள் நலக்கூட்டணியும், பாஜகவும் வெற்றிலைபாக்கு வைத்து அழைத்தது. ஆனால், இவைகளை தேமுதிக கண்டுகொள்ளவே இல்லை. இந்த நிலையில், தேமுதிக தனித்துப் போட்டியிடும் என விஜயகாந்த் அறிவித்தார். ஆனால், தனது தலைமையை ஏற்கும் கட்சியியுடன் கூட்டணி அமைப்போம் என்றார்.
 
இந்த நிலையில், எங்களது  கூட்டணி மக்கள் மத்தியில் பலம் வாய்ந்த கூட்டணியாக மாறிப்போய்விட்டது. இனி எங்கள் கூட்டணிக்கு விஜயகாந்த் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி அதுபற்றி நாங்கள் கவலைப்படபோவதில்லை என மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ கருத்து தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil