உன்னிகிருஷ்ணன் தங்கியிருந்த அறைக்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
சென்னை ஐஐடியில் பணிபுரிந்து வரும் கேரளாவைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவர் திடீரென நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவர் தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதை அடுத்து, அவரது உடல் ஐஐடி வளாகத்தில் உள்ள காந்தி மைதானத்தில் கண்டெடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் இந்த மரணம் குறித்த விசாரணைக்கு சென்னை ஐஐடி முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், ஏப்ரலில் பணியில் சேர்ந்த ஊழியர் உன்னி கிருஷ்ணன் வளாகத்துக்கு வெளியே வசித்து வந்ததாக சென்னை ஐஐடி தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உன்னிகிருஷ்ணன் தங்கியிருந்த அறைக்கு சென்று, போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், பெற்றோரை பிரிந்து தனியாக இங்கு தங்கி படிக்க தன்னால் முடியவில்லை. மேலும், ஆய்வுக்கான பாடம் கடினமாக இருப்பதாகவும், தன்னால் சாதிக்க முடியாது என்றும், தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும் உருக்கமாக 11 பக்கத்தில் எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.