Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம்: அனைத்து நீதிமன்றங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு..!

Mahendran
வியாழன், 21 நவம்பர் 2024 (11:58 IST)
ஓசூர் அருகே வழக்கறிஞர் கண்ணன் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓசூர் நீதிமன்ற வளாகத்தில், நேற்று வழக்கறிஞர் கண்ணன் என்பவர், ஆனந்தன் என்ற மற்றொரு வழக்கறிஞரால் தாக்கப்பட்ட நிலையில், தற்போது ஆனந்தன் மற்றும் அவரது மனைவி சத்யா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

டாக்டர், ஆசிரியர், வழக்கறிஞர் என அடுத்தடுத்து தாக்குதல் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஏற்கனவே அனைத்து மருத்துவமனைகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும், நீதிமன்றத்திற்கு வருபவர்கள் ஆயுதங்கள் வைத்துள்ளார்களா என்று சோதனை செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், வழக்கறிஞர் கண்ணன் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசும் மத்திய அரசும் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராங் நம்பர்.. அமரன் படத்தால் மாணவருக்கு நேர்ந்த சோகம்! இழப்பீடு கேட்டு நோட்டீஸ்!

திருச்செந்தூரில் ராட்சத அலை.. கடலில் குளித்த 2 பெண்களுக்கு கால் முறிவு..!

அமெரிக்க முதலீடுகளை பயன்படுத்த மாட்டோம்! அதானி அதிரடி அறிவிப்பு..!

நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

சமாஜ்வாடிக்கு ஓட்டுப்போட மறுத்த பெண் கற்பழித்துக் கொலை? - உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments