Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரணத்துக்குப் பின் என்ன?... அம்மாவுக்கு கடைசி கடிதம்… சட்டக்காலூரி மாணவர் தற்கொலை

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (15:26 IST)
சென்னை தரமணியில் படித்துவந்த சல்மான் என்ற 19 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த 19 வயதான சல்மான் என்ற சட்டக்கல்லூரி மாணவர் சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைகழகத்தில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.  சில தினங்களுக்கு முன்பு சல்மான் சொந்த ஊருக்கு சென்று சென்னை திரும்பியுள்ளார்.  இந்நிலையில் கல்லூரிக்கு அருகே தான் தங்கி இருந்த விடுதியில் தான் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவருடன் தங்கியிருந்த சக மாணவர்கள் வெளியில் சென்று திரும்பிய போது சல்மான் தூக்கில் தொங்கியபடி இறந்தநிலையில் காணப்பட்டுள்ளார். இதையடுத்து மாணவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸார் சல்மானின் உடலைக் கைப்பற்றி உடல்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சல்மானின் அறையில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் “மரணத்துக்குப் பின்னர் என்ன நடக்கும் என தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அம்மாவுக்காக 5000 ரூபாய் சேமித்து வைத்துள்ளேன்” என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். மாணவரின் இந்த தற்கொலை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments