நடிகை குஷ்புவுக்கு பாஜகவில் புதிய பதவி!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (06:45 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்த குஷ்புவுக்கு தற்போது புதிய பதவி அளிக்கப்பட்டுள்ளது
 
பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் பாஜகவின் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகை குஷ்பு மற்றும் எச் ராஜா ஆகியோர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
எச்.ராஜா சமீபத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்ட குஷ்புவுக்கு தற்போது சிறப்பு அழைப்பாளர் என்ற பதவி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
பொன் இராதாகிருஷ்ணன், குஷ்பூ, ஹெச் ராஜா ஆகியோர்களுக்கு பாஜகவில் பதவி அளிக்கப்பட்டதை அடுத்து அக்கட்சியின் தொண்டர்கள் அவர்களுக்கு
 வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் ஒரு அரசியல் ஆபத்து!.. இவர் முதல்வர் ஆனா நாடு நாசம்தான்!..

இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கலாம்!.. தடையை நீக்கிய அமெரிக்கா!..

ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு!.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

பொண்டாட்டியை எப்படி மதிக்கணும்னு ராமராஜன்கிட்ட விஜய் கத்துக்கணும்!.. ஒரு பிளாஷ்பேக்!..

மனைவியை கண்கலங்காம பார்த்துக்கோங்க!.. நேற்று திருமணத்தில் விஜய் சொன்னாரா?...

அடுத்த கட்டுரையில்
Show comments