பாஜகவினரின் பின்னடைவை கிண்டலடிக்கும் விதமாக குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருக்கிறார்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சண்டிகார், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்கள் கடந்த ஒரு மாதமாக பல கட்டமாக நடைபெற்று வந்தது. அந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று வெளியாக இருகின்றன. தற்பொழுது வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி தெலிங்கானாவில் டி.ஆர்.எஸ் கட்சி ஆட்சியை அமைக்க இருக்கிறது. மிசோரமை பொறுத்தவரை எம்.என்.எஃப் ஆட்சியை அமைக்க இருக்கிறது. சத்திஸ்கரில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது. ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய இடங்களில் பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் நடிகையும் காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பாஜகவினரே நீங்கள் சற்று காலம் ஓய்வெடுங்கள் என பாஜகவினரின் பின்னடைவை கிண்டலடிக்கும் விதமாக கருத்து பதிவிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த பாஜகவினர் குஷ்புவை டிவிட்டரில் வருத்தெடுத்து வருகிறார்கள்.