Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிட்டா மிராசுகளுக்கு வாய்ப்பு? அடபோப்பா நீ வேற... ஜெயகுமாருக்கு அழகிரி பதில்!!

Webdunia
புதன், 2 அக்டோபர் 2019 (11:18 IST)
காங்கிரஸ் கட்சி மிக வறுமையில் உள்ளது கட்சி என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அமைச்சர் ஜெயகுமாருக்கு பதில் அளித்துள்ளார். 
 
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகளான திமுக - காங்கிரஸ் தங்களுக்குள் தொகுதி பங்கீடு செய்து கொண்டுள்ளன. 
 
அதன்படி விக்கிரவாண்டியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரஸும் போட்டியிடுகின்றன. திமுக வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸும் வேட்பாளரை அறிவித்துவிட்டது.
நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பில் ரூபி பில்டர்ஸ் தலைவர் ரூபி மனோகரன் போட்டியிட உள்ளார். இதை விமர்சித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், நாங்குநேரியில் அதிமுக சார்பில் சாமானிய தொண்டன் நிறுத்தப்பட்டுள்ளான். ஆனால், காங்கிரஸ் சார்பில் தொகுதிக்கு தொடர்பில்லாத கோடீஸ்வரர் ரூபி மன்கோகரன் நிறுத்தப்பட்டுள்ளார். 
 
காங்கிரஸ் கட்சியில் மிட்டா மிராசுகளுக்குத்தன வாய்ப்பு கிடைக்கும். காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களில் 100 சதவீதத்தில் 90 சதவிதம் பேர் வசதி படைத்தவர்களாகத்தான் இருக்கிறார்கள் என தெரிவித்தார். 
 
இதற்கு பதில் அளித்துள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மிகுந்த வறுமையில் இருக்கும் கட்சி காங்கிரஸ் கட்சி. அதிமுக போல பணத்தை வாரி இறைக்கும் கட்சி இந்தியாவிலேயே கிடையாது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

மழை வெள்ள பாதிப்பு.. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு..!

சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம்! தமிழக அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments