Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்களிடம் பிக்பாஸ் தர்ஷன் கேட்ட மன்னிப்பு!

Advertiesment
மக்களிடம் பிக்பாஸ் தர்ஷன் கேட்ட மன்னிப்பு!
, செவ்வாய், 1 அக்டோபர் 2019 (19:51 IST)
பிக்பாஸ் சீசன் 3 டைட்டிலை வெல்வார் என்று பலராலும் கணிக்கப்பட்ட தர்ஷன் கடந்த ஞாயிறு அன்று வெளியேறியது கமல்ஹாசன் உள்பட பலருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தர்ஷன், தனது டுவிட்டரில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
 
முதலில் நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் வெளியே வந்தவுடன்  வீடியோவை பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் சில காரணங்களால் முடியவில்லை .அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 
 
 
பொதுவாக ஒரு விஷயத்தை கூறுவதற்கு முன் நான் ரொம்ப யோசிப்பேன். என்னை பற்றி நானே பெருமையாக சொல்லிக்கொண்டால் நன்றாக இருக்காது என்று எனக்கு தோன்றும். ஆனால் இந்த விஷயத்தை நான் பெருமையாகவும் கர்வத்துடனும் சொல்லி கொள்கிறேன். அது என்னவெனில் பிக்பாஸ் வீட்டில் மொத்தம் 16 பேர் போட்டியாளர்கள் இருந்தாலும் மற்றவர்களுக்கு ரசிகர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் எனக்கு மட்டும் தான் ஒரு பெரிய குடும்பமே கிடைத்தது
 
 
webdunia
மேலும் எல்லோரும் என்னிடம் கேட்ட ஒரு கேள்வி என்னவெனில் நீங்கள் டைட்டில் வெற்றி பெறவில்லை என்பதற்காக வருத்தப்படுகிறீர்களா? என்பதுதான். அவர்களுக்கு நான் கூறும் பதில், ‘நிச்சயமாக எனக்கு வருத்தமே இல்லை. ஏனெனில் டைட்டிலை விட இப்படி ஒரு குடும்பம் கிடைத்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். அந்த விஷயத்தில் நான் ஜெயிச்சிட்டேன் .
 
 
மேலும் இன்னொரு விஷயம் என்னவெனில் தற்போது வீட்டில் இருக்கும் நான்கு போட்டியாளர்களுக்கு ஓட்டு போடுங்கள். யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று நான் யாரையும் குறிப்பிட்டு சொல்ல மாட்டேன். உங்களுக்கே தெரியும் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று. யாருக்கும் பரிதாபத்தை பார்த்து யாருக்கும் ஓட்டு போடாதீர்கள், உண்மையிலேயே யார் நன்றாக விளையாடுகிறார்கள் என்பதை முடிவு செய்து ஓட்டு போடுங்கள். எனக்கு நீங்கள் கொடுத்த ஆதரவை தற்போது வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்
 
 
மேலும் உங்கள் எல்லோரையும் தனித்தனியாக சந்திக்கவேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசை. கூடிய சீக்கிரம் அது நிறைவேறும் என எதிர்பார்க்கிறேன்’ என தர்ஷன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘தளபதி 64’ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!