Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகள் வாழ்க்கையில் விளையாடிய டாக்டருக்கு இதுதான் தண்டனையா? கடுப்பான மக்கள்

Webdunia
வியாழன், 20 ஜூன் 2019 (13:32 IST)
மருத்துவ கல்லூரி மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்த டாக்டரின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டபோதிலும் அவரை கைது செய்யாமல் பணியிடை மாற்றம் செய்திருப்பது பொது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் எலும்பு முறிவு பிரிவின் உதவி பேராசிரியராக பணிபுரிந்தவர் கந்தசாமி. இவர் அங்குள்ள மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். என் ஆசைக்கு இணங்கா விட்டால் உனக்கு சான்றிதழ் கிடைக்காது என மிரட்டியுள்ளார்.

ஒரு மாணவி இது குறித்து கல்லூரி நிர்வாகத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட கல்லூரி நிர்வாகத்திற்கு பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன.

பணிக்கு குடித்துவிட்டு வருவது, மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, நோயாளியுடன் இருக்கும் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொள்வது என இவர் செய்த பல குற்றங்களும் தெரிய வந்துள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவரை மருத்துவ கல்லூரியில் இருந்து மருத்துவ துறைக்கு பணியிட மாற்றம் செய்துள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 நாட்களில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! 6 நாட்களுக்கு மிதமான மழை! - சென்னை வானிலை ஆய்வு மையம்!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்ய பிரியா கொலை வழக்கு: நீதிபதியின் அதிரடி தீர்ப்பு

'நான் அமைதியான பிரதமர் இல்லை, ஊடகங்களிடம் பேச பயந்தது இல்லை' - மன்மோகன் சிங் வாழ்க்கை எப்படி இருந்தது?

பீகாரில் மாறுகிறதா அரசியல் நிலவரம்? நிதிஷ்குமார் - லாலு பிரசாத் யாதவ் கூட்டணி?

கரும்பு டன்னுக்கு ரூ.950 குறைப்பு.. வயிற்றில் அடிப்பதுதான் திராவிட மாடலா? - பாமக ராமதாஸ் காட்டம்!

அடுத்த கட்டுரையில்