சென்னையில் உள்ள சுற்றுலா பகுதிகளில் அண்ணா நகரில் உள்ள டவரும் ஒன்று. இந்த டவருக்கு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் காதலர்களும் அடிக்கடை வருகை தருவதுண்டு. காதலர்களின் விருப்பத்திற்குரிய இடங்களில் ஒன்றாகிய இந்த அண்ணா நகர் டவரில் இன்று ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கு இன்று காலை வந்த காதலர்கள் திடீரென ஒருவரை ஒருவர் தாக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் காதலன் காதலியை கத்தியால் குத்த, அதே கத்தியை காதலரிடம் இருந்து பறித்து காதலனை காதலி குத்த சில நிமிடங்களில் அந்த பகுதியே ஒரே ரத்தக்களமாகியது.
தற்போது இருவரும் கத்திக்குத்தால் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த கத்திக்குத்து சம்பவத்தால் அண்ணா நகர் டவரில் சில மணி நேரங்கள் பதட்டத்தில் இருந்தது.