Publish Date: Sat, 11 Sep 2021 (11:48 IST)
Updated Date: Sat, 11 Sep 2021 (11:49 IST)
ஒரு ரூபாய் நாணயத்தை முழுங்கிய இரண்டு வயது சிறுவனை அரசு மருத்துவர்கள் சிறிய அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றியுள்ளனர்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் மீதுன் என்ற இரண்டு வயது சிறுவன் விளையாடிக் கொண்டு இருந்த போது தெரியாமல் ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கியுள்ளார். இதையறிந்து அதிர்ச்சியான அவனின் பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைத்துள்ளனர்.
இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு செல்ல அங்கிருந்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து நாணயம் எந்த இடத்தில் சிக்கியுள்ளது என்பதைக் கண்டறிந்தனர். அதில் நாணயம் தொண்டையில் இருப்பதை பார்த்தி சிறிய அறுவை சிகிச்சை செய்து நாணயத்தை வெளியே எடுத்து சிறுவனைக் காப்பாற்றினர்.