Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவை பிடித்தாலும் காங்கிரஸுக்காக எதிர்த்து பேசினேன்! – ஒரேயடியாய் ஜம்ப் அடித்த குஷ்பூ

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (14:25 IST)
இன்று காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள குஷ்பூ தான் பாஜகவில் திட்டங்கள் பிடித்திருதாலும் அதை எதிர்த்ததாக கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நடிகை குஷ்பூ காங்கிரஸில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்த தனது ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பியுள்ள குஷ்பூ உடனடியாக பாஜகவிலும் இணைந்துள்ளார்.

தற்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட குஷ்பூ செய்தியாளர்களுக்கு பேசிய போது “ஆரம்பம் முதலே பாஜகவின் திட்டங்கள் பல எனக்கு பிடித்திருந்தன. ஆனால் காங்கிரஸில் இருப்பதாலேயே அவற்றை எதிர்த்தேன். ரபேல் விவகாரத்தில் கூட ராகுல் காந்தி அதை எதிர்த்ததால் தான் நானும் எதிர்த்தேன். எல்லாருக்கும் ஒரு காலக்கட்டத்தில் மாற்றம் வரும். பாஜகவில் பல்வேறு திட்டங்கள் ஆக்கப்பூர்வமாக எனக்கு தோன்றிய நிலையில் அதில் இணைவதுதான் சரி என புரிந்து கொண்டேன். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிக்காக பாடுபடுவேன்” என்று கூறியுள்ளார்.

குஷ்பூவின் இந்த விளக்கம் காங்கிரஸினருக்கே பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. கட்சி மாறிய சில மணி நேரங்களிலேயே இப்படி கருத்துக்களை மாற்றி பேசுகிறார் என காங்கிரஸில் இருப்பவர்கள் பேசி வருகிறார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவையில் இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்.. எதிர்க்கட்சிகளின் ரியாக்சன் என்ன?

இன்று காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை? வானிலை எச்சரிக்கை..!

அதானி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: நீதிமன்றம் உத்தரவு..!

அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து! மறு தேர்வு தேதி அறிவிப்பு வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி..!

பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுபவர்கள் மீது வழக்குப்பதிவு: ஜனவரி 1 முதல் அமல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments