Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள கழிவு விவகாரம் எதிரொலி; குப்பை கொட்டுபவர்கள் மீது அடுத்தடுத்து வழக்குப்பதிவு!

Prasanth Karthick
சனி, 21 டிசம்பர் 2024 (10:34 IST)

கேரள - தமிழக எல்லையில் வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டும் கேரள வாகனங்கள் மீது அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

 

 

கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகள், கோழி கழிவுகளை கொண்டு வந்து தமிழக எல்லையில் உள்ள ஊர்களில் கொட்டும் சம்பவம் தொடர் கதையாக இருந்து வரும் நிலையில், இதுகுறித்து சமீபத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, அரசு தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தானே லாரி எடுத்துக் கொண்டு செல்வேன் என பேசியிருந்தார்.

 

அவரை தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பலர் இந்த சம்பவம் குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வந்தனர்.
 

ALSO READ: வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் வழக்கு..!
 

அதனை தொடர்ந்து கேரள மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. நடுகல்லூரில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் கேரளா மண்டல புற்றுநோய் மையம் மற்றும் க்ரெடென்ஸ் மருத்துவமனையின் கழிவுகள்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்காக மருத்துவ கழிவுகளில் இருந்து மருந்து குப்பிகள், சிரிஞ்சு, ரத்த சாம்பிள்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டு பசுமை தீர்ப்பாயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தமிழகத்தை சேர்ந்த 2 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள குப்பை ஏஜெண்டுகளை கண்டுபிடிக்க விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள கழிவு விவகாரம் எதிரொலி; குப்பை கொட்டுபவர்கள் மீது அடுத்தடுத்து வழக்குப்பதிவு!

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் வழக்கு..!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை எதிரொலி: பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்..!

உக்ரைன் தலைநகர் மீது ஏவுகணை தாக்குதல்! போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு முன் புதின் செய்யும் வேலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments