Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரும்பச்சை நிறமாக மாறிய காவிரி நீர் – விவசாயிகள், பொதுமக்கள் பீதி

Webdunia
ஞாயிறு, 4 நவம்பர் 2018 (11:11 IST)
ஈரோடு மாவட்டத்தில் காவிரி தண்ணீர் கரும்பச்சை நிறத்துக்கு மாறியுள்ளதைக் கண்டு அங்குள்ள பொதுமக்களும் விவசாயிகளும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அக்ரஹாரம் பகுதிக்கு அருகில் ஓடும் காவிரி நீர் சாயப்பட்டறை  மற்றும் தோல் தொழிற்சாலைக் கழுவுகளால் மாசுபட்டு வருகிறது. கடந்த மாதம் பெய்த பெருமழையில் ஆற்றில் தேங்கியிருந்த கழிவுகள் அடித்து செல்லப்பட்டன. இந்நிலையில் ஒரு மாதமாக தெளிவாக ஓடிய காவிரி நீர் தற்போது அடர்பச்சை நிறத்துக்கு மாறியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் காவிரி ஆற்றில் இருந்து துரநாற்றமும் எழுந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் அந்த தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். மேலும் அந்த தண்ணீரைக் குடிக்கும் ஆடு மாடுகள் உடல் உபாதைகளுக்கு ஆளாவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிறமாற்றத்துக்குக் காரணமாக பொதுமக்கள் ‘மீண்டும் சாயப்பட்டறைகளும் தோல் தொழிற்சாலைகளும் வழக்கம்போல தங்கள் கழிவுகளை நேரடியாக ஆற்றில் கலந்து விடுகிறார்கள்’ என்று கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments