Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டப்போராட்டத்தை தொடர்வென்: தந்தை விடுதலை குறித்து கெளசல்யா

Webdunia
திங்கள், 22 ஜூன் 2020 (13:15 IST)
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உடுமலை சங்கர் கொலை வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு சற்று முன்னர் வெளியானது என்பதை பார்த்தோம். இந்த தீர்ப்பில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த கௌசல்யாவின் தந்தை சின்னசாமி என்பவர் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கௌசல்யாவின் தாய் விடுதலையை எதிர்த்து காவல்துறையினர் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் இந்த வழக்கிலிருந்து கௌசல்யாவின் தாய் தந்தை ஆகிய இருவருமே விடுதலை செய்யப்பட்டனர்
 
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த கௌசல்யா, ‘இந்த தீர்ப்பு தனக்கு அதிருப்தி அளிப்பதாகவும், தனது தந்தையின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்றும் தனக்கு நீதி கிடைக்கும் வரை சட்டப் போராட்டத்தை தொடர்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார் 
 
சங்கர் கொலை வழக்கில் தந்தை விடுதலை என்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று கௌசல்யா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கௌசல்யாவின் இந்த முடிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுக்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருவதால் இது குறித்த ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments